அரைக்காசு அம்மன்
அரைக்காசு அம்மன் WEB
கதைகள்

தொலைத்த பொருளை கிடைக்கச்செய்யும் அரைக்காசு அம்மன்! பெயர் காரணம் இதுதான்!

Jayashree A

அரைக்காசு அம்மன். இந்த அம்மன் பார்வதி தேவியின் அம்சமாக அறியப்படுகிறாள்.

இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் நாம் தொலைத்தப்பொருள் நம் கைக்கு வந்து சேரும் என்பது நம்பிக்கை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் அன்னை பிரகதாம்பாள் ஆலயம் இருக்கிறது. இந்த அன்னை பிரகதாம்பாளை தான் அரைக்காசு அம்மன் என்றும் கூறுவர்.

அரைக்காசு அம்மன்

இக்கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், இந்த அம்மனை நினைத்து, நிவைத்தியமாக பானகம் கரைத்து, கூடவே ஒரு ரூபாயையும் வைத்து வேண்டிக்கொண்டால், நாம் தொலைத்தப்பொருள் நிச்சயம் கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.

அரைக்காசு அம்மன் என்ற சொல் வர காரணம் என்ன என்பதை பார்க்கலாம்...

முன்னொரு சமயம் புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர்களின் குலதெய்வமாக அன்னை பிரகதாம்பாள் இருந்திருக்கிறாள். நவராத்திரி என்பது அம்பாளுக்கு உகந்த நாட்கள் அல்லவா? அதனால் நவராத்திரி சமயங்களில் அன்னையை கொண்டாடும் விதமாக ஊரில் விளைந்த தானியங்கள், அரிசி, வெல்லம் போன்றவைகளுடன் அன்னையின் உருவம் பதித்த அரைக்காசையும், அன்னையின் பெயரை சொல்லி மக்களுக்கு தானமாக வழங்கி வந்தனர் அரசர்கள்.

ஒருசமயம் அரசருடைய முக்கியமான பொருள் ஒன்று காணாமல் போகவே, அரசர் அரைகாசை வைத்து அன்னையை வேண்டிக்கொண்டாராம். அவர் வேண்டிக்கொண்டது போல அவர் தொலைத்த பொருளும் கிடைக்கவே.... அன்றிலிருந்து தொலைந்தவற்றை மீட்டுத்தரும் அன்னையாக பிரகதாம்பாள் , அரைக்காசு அம்மனாக அறியப்படுகிறாள். என்ற வரலாறும் கூறப்படுகிறது.