சங்கரர் முதலையிடம் அகப்படுதல்
சங்கரர் முதலையிடம் அகப்படுதல் PT
கதைகள்

”உங்கள் தலை வேண்டும்” - பிரம்ம சூத்திர பாஷ்யத்தை பரப்புவதற்காக சங்கரர் சந்தித்த துன்பங்கள்!!

Jayashree A

சிறு வயதிலேயே உபநயனம் செய்யப்பட்டு குருகுலத்தில் அனைத்து வேத பாராயணங்கள், அத்வைதங்கள், புராணங்கள், சாஸ்திர சம்பிரதாயங்களை கற்று தேர்ந்த சங்கரர், தனது தாய் ஆர்யாம்பாளுக்கு உதவியாக இருக்க பூர்ணா நதியை தன் வீட்டின் வழியே ஓடவைத்தார். இதை கண்ட ஆர்யாம்பாளும் ஊர் மக்களும் மகிழ்சியடைந்தனர். முதலையின் வாயிலில் பிடிபட்ட சங்கரர், துறவறம் பூண்டார். தனது குருவாக கோவிந்த பகவத் பாதரை ஏற்றுக்கொண்டார். தனது குருவின் மூலம் கற்றுக்கொண்ட அத்வைத சித்தாந்தத்தை உலகெங்கிலும் பரப்பினார்.

இனி...

வியாசரின் ஆணைப்படி, பிரம்ம சூத்திர பாஷ்யத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக சங்கரர் காசியிலிருந்து புறப்பட்டு பிரயாகைக்கு வந்தார் அங்கு குமாரிலப்பட்டர் என்பவரை சந்தித்தார். அவருடன் அத்வைத சித்தாந்தம் , பிரம்ம சூத்திர பாஷ்யம் குறித்து விவாதம் செய்தார்.

குமாரிலப்பட்டர், சங்கரரிடம் , மகிஷ்மதி என்னும் ஊரில் மண்டன மிஸ்ரர் என்ற வேத விற்பன்னர் ஒருவர் இருக்கிறார், அவரிடம் இத்தகைய விவாதத்தில் பங்கு பெற்று அவரை வெற்றிக்கொள்ள உங்களால் இயலுமா? என்றதும் சங்கரர் மிஸ்ரரை சந்திக்கச்சென்றார்.

சங்கரர் ஒரு முறை கேதாரம் சென்றார். அங்கு நிலவிய கடும் குளிர் சீடர்களை வாட்டியது. சங்கரர் சிவபெருமானை வேண்டி ஒரு வெந்நீர் ஊற்று தோன்ற செய்தார். இன்றும் அந்த வெந்நீர் ஊற்று அங்கு காண கிடைக்கிறது.

மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் சிறந்த பண்டிதை. மண்டனமிஸ்ரருக்கும் , சங்கரருக்கும் இடையில் நிகழ்ந்த விவாதத்தில் உபயபாரதி நடுவராக இருந்தாள். இவர்களுடைய வாதமானது ஏழு நாட்களுக்கும் மேல் தொடர்ந்தது, இதில் மண்டன மிஸ்ரர் தோல்வியை தழுவினார்.

ஒருசமயம் சங்கரர் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் சென்றார். அங்கு மல்லிகார்ஜூன சுவாமியை தரிசனம் செய்தார். அப்பொழுது காபாலிகன் என்றவன் வந்தான். சங்கரர் துர்மதங்களை எதிர்த்து அத்வைதத்தை பரப்பி வந்ததை அவன் விரும்பவில்லை. தனது மதமும் அழிந்துவிடும் என அஞ்சிய கபாலிகன் எப்படியாவது சங்கரரை அழிக்க வேண்டும் என முடிவு செய்தவன், சங்கரரிடம் ”நான் பல வருடங்களாக சிவ பெருமானை நோக்கி தவம் செய்து வருகிறேன். ஆகையால் இந்த பூத உடலானது கைலாயம் செல்லவேண்டும் என்பதே எனது விருப்பம். என் தவத்தின் பலனாக பரம சிவன் தோன்றி எல்லாம் அறிந்த ஞானி அல்லது சக்கரவர்த்தியின் தலையை அக்னியில் சமர்ப்பித்து ஹோமம் செய்தால் உனது ஆசை யானது நிறைவேறும் என்றார். ஆகயால் நீங்களே ஒரு சிறந்த ஞானி. எனவே என் எண்ணம் நிறைவேற தாங்கள் உங்களுடைய தலையை தந்து உதவ வேண்டும்” என்றான். சங்கரரும் சம்மதித்தார்.

அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

யார் இந்த குமாரிலப்பட்டர்?

இந்து மதத்தை சார்ந்த குமாரிலப்பட்டர் என்பவர் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர்களது காலத்தில் புத்த மதம் பரவலாக இருந்தது. இதனால் புத்தமத துறவிகள் இந்து மத வேதத்தை குறை கூறி வந்தனர்.

இது குமாரிலப்பட்டருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. புத்த மதக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களை எதிர்ப்பது சரியாகாது என்று எண்ணிய பட்டர், தான் புத்த குருகுலத்தில் சீடராகச் சேர்ந்து அவர்களின் கோட்பாடுகள் தான் என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டார். அதனால் புத்தமத்தில் சேர்ந்து புத்த துறவிகளிடம் நற்பெயரும் பெற்றார்.

குமாரிலப்பட்டரின் புத்த குரு ததாகதர். ஒரு நாள் ததாகதர் பாடம் நடத்தும்போது வேதங்களையும் கடவுளையும் கடுமையாக நிந்தித்தார். அவருடைய வார்த்தைகள் குமாரிலப்பட்டரின் மனதை மிகவும் வருத்தியதுடன் கண்ணீரையும் வரவழைத்தது. பட்டர் கண்ணீர் சிந்துவதைக் கண்ட ததாகதர் அவர் ஒரு இந்து வேதியர் என்பதைக் கண்டுக்கொண்டு அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் குமாரிலப்பட்டர் புத்த துறவியை ஏமாற்றி விட்டோம் என் வருந்தி தனது உயிரை தியாகம் செய்தார்.

இதன் முன் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்