மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 19 கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். ஏப்ரல் 26 பட்டாபிஷேகம், 27 திக்கு விஜயம், 28 காலை மேற்கு-தெற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று (ஏப்ரல் 19 ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் முக்கிய விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும் பெருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 10:30 மேல் - 11:30 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது..
அத்துடன் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார். ஏப் 26ஆம் தேதி அன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 27ஆம் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் ஏப் -28 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாண விழாவில் அன்று இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
திருக்கல்யாணத்திற்கு மறுநாள் 29ஆம் தேதி மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.. இதற்கான விழா ஏற்பாடை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடததக்கது.
1. சித்திரை மாதம் 6ம் தேதி (19.04.2026 ) ஞாயிற்றுக்கிழமை - கொடியேற்றம் - காலை 10:30 மணி முதல் 11:30 வரை
2. சித்திரை மாதம் 13ம் தேதி [ 26.04.2026 ) ஞாயிற்றுக்கிழமை - பட்டாபிஷேகம் - தங்க பல்லாக்கு காலை 10 மணி, மாலை வெள்ளி சிம்மாசனம் 9 மணி முதல் 11 மணி வரை
3. சித்திரை மாதம் 14ம் தேதி ( 27.04.2026) திங்கட்கிழமை - திக்விஜயம் மரவர்ண சப்பரம் காலை 7 மணி முதல் 9:30 மணி வரை, மாலை இந்திர விமானம் 6 மணி முதல் 11:30 மணி வரை
4. சித்திரை மாதம் 15ம் தேதி (28.04.2026) செவ்வாய்கிழமை திருக்கல்யாணம் காலை 8:35 மணி முதல் 9 மணி வரை, மாலை தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் புஷ்ப பல்லாக்கில் ஏறி வலம் வருவார்.. இரவு 7:30 மணி முதல் 11:30
5. சித்திரை மாதம் 16ம் தேதி (29.04.2026) புதன்கிழமை - திருத்தேரோட்டம் காலை 6:30 மணிக்கு வடம் பிடித்தல் , மாலை சப்தாவர்ண சப்ரம் 7 மணி முதல் 10:30 மணி வரை
6. சித்திரை மாதம் 17ம் தேதி (30.04.2026) வியாழக்கிழமை - கள்ளழகர் எதிர்சேவை காலை 5:30 மணி முதல் 7 மணி வரை , மாலை 4 மணி முதல் 4:30 மணி வரை
7. சித்திரை மாதம் 18ம் தேதி (01.05.2026) வெள்ளிக்கிழமை - கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் காலை 5 மணி முதல் 6:30 மணிக்குள் நடைபெறயுள்ளது.