சிதம்பரம்
சிதம்பரம் PT
ஆன்மீகம்

”காஸ்மிக் நடனம்” அது என்ன சிதம்பர ரகசியம்? தில்லை நடராஜர் கோவிலைப் பற்றிய பிரமிப்பூட்டும் தகவல்கள்!

Jayashree A

தில்லை என்பது சிவஸ்தலம். இங்கு சிவபெருமான், பதஞ்சலி வியாக்ரபாதா என்ற முனிவர்களுக்கு தனது நாட்டியத்தை அரங்கேற்றிய இடம். அதனால் இங்கு சிவபெருமான் நடராஜராக அறியப்படுகிறார். இக்கோவிலின் பெருமை சிலவற்றையும் அதில் முக்கியமாக சிதம்பர ரகசியம் என்ன என்பதை பார்க்கலாம்.

பஞ்ச பூத கோயில்களில், ஆகாயத்தை குறிப்பது தில்லை நடராஜர், காற்றை குறிப்பது காலஹஸ்தி, நிலத்தை குறிப்பது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் இம்மூன்று கோவில்களும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, ஏரியல் வியூவில் பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைய கட்டட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இங்கு ஆனந்த தாண்டவம் புரியும் நடராஜரின் வலது கட்டை விரலானது பூமியின் காந்தபுலத்தின் மையத்தைக்குறிப்பதாக அறிவியல் ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர். இக்கோவிலானது பத்தாம் நூற்றாண்டில் சோழர்களால் புரனமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் ஐந்து முக்கிய சபாக்கள் உள்ளன, அவை கனகா சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசாபா. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவத்தை “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல அதிசயங்களை இக்கோவிலானது கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் சிதம்பர ரகசியம். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இங்கு வீற்றிருக்கும் நடராஜரை கவனித்திருக்கிறீர்கள் என்றால் அவரின் இடது புரத்தில் சிவகாமசுந்தரி அன்னை வீற்றிருப்பாள். வலது பக்கம் எப்பொழுதும் ஒரு துணி மூடப்பட்டிருப்பது தெரியும். அந்த துணியை விலக்கினால் தங்கதினால் ஆன வில்வ மாலை 3 அடுக்காக தொங்கிக்கொண்டிருக்கும் இதைத் தான் சிதம்பர ரகசியம் என்பார்கள். அதாவது சிவபெருமான் வில்வமாலையில் அரூபமாக அங்கு காட்சியளிப்பதாக ஐதீகம். ஆறுகால பூஜையின் முடிவில் நடராஜருக்கு தீபாராதனை செய்யும் பொழுது சிதம்பர ரகசியமாக சொல்லப்படும் அத்திரை சீலையை விலக்கப்பட்டு ஒரு நிமிடம் பக்தர்களுக்கு காட்சிப்படுத்தப்படும். இதை தரிசித்தால் நம் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.