சபரிமலை ஐய்யப்பனுக்கு 120 கிராம் தங்கத்தாலான வில்லம்பு மற்றும் தலா 400 கிராம் எடையுள்ள வெள்ளியாலான 2 யானை சிற்பங்கள் தெலங்கானா பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டன.
சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்த செகந்திராபாத்தை சேர்ந்த
கேட்டரிங் உரிமையாளர் ரமேஷ் என்பவர், கண்ணாடிப்பேழையில் கொண்டு வந்த தன் காணிக்கைகளை, அருண்குமார் நம்பூதிரியிடம் வழங்கினார்.
மகன் மருத்துவராக வேண்டுமென்ற வேண்டுதல் நிறைவேறியதன் பொருட்டு இந்த காணிக்கைகளை வழங்கியதாக ரமேஷ் தெரிவித்தார்.