WTC
WTC File image
Cricket

‘இன்னும் சில காயங்கள்’ - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியை இந்த இந்திய வீரர்கள் மிஸ் செய்கிறார்கள்?

Jagadeesh Rg

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து சில இந்திய வீரர்கள் காயம் காரணமாக விலக நேரிடலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த பட்டியலில், இந்திய அணியில் வெகுநாள் கழித்து ரஹானே சேர்க்கப்பட்டிருந்தார்.

Rohit Sharma and Cummins

வெளியாகியிருந்த வீரர்கள் பட்டியல் : ரோகித் சர்மா , சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு தொடைப் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதால், அவர் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அவருக்கு மாற்றாக வேறு எந்த வீரரையும் பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக மேலும் சிலர் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Virat Kohli

முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் காமடைந்துள்ளார். அவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இருந்தாலும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உடற்தகுதி சான்று பெற்றபின்புதான் அவரால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருக்கும் உமேஷ் யாதவும், ஷர்துல் தாக்குரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இவர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் இடம்பெறாமல் போகும்பட்சத்தில் மாற்று வீரர்களை பிசிசிஐ யோசிக்ககூடும்.