ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனின் முக்கிய விமான நிலையம் தகர்ப்பு - அதிபர் செலன்ஸ்கி தகவல்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனில் உள்ள முக்கிய விமான நிலையத்தை ரஷ்ய படைகள் தகர்த்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அந்நாட்டில் உள்ள சில நகரங்களை கைப்பற்றி இருக்கும் ரஷ்ய ராணுவம், மேலும் பல நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்கு உக்ரைனில் வின்னிச்சியா நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை ரஷ்ய படையினர் ஏவுகணைகள் மூலம் தகர்த்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "வின்னிச்சியா நகரில் உள்ள விமான நிலையம் ரஷ்ய விமானப் படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளை மீறி ரஷ்யா போரை நடத்தி வருகிறது. விரைவில் அதற்கு அந்நாடு விலை கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.