ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பெலராஸ் நாட்டில் இருமுறையும், துருக்கியில் ஒருமுறையும் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் போர் நிறுத்துவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைனில் தாக்குதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்றுள்ள 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது. தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்துவதை நிறுத்த உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.