உக்ரைனில் நடந்து வரும் போரில் அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் விரிவான போரை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். போர்க்குற்றங்களை செய்துள்ள ரஷ்யா அதை ஒப்புக்கொள்ள தயங்குவதாகவும் அந்நாடு அரக்கத்தனமாக மாறிவிட்டதாகவும் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். ஆனால் தங்கள் தவறுகளை ரஷ்யா ஒப்புக்கொள்ளும் காலம் நிச்சயம் வரும் என்றும் செலன்ஸ்கி தெரிவித்தார். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு மேலும் உதவ வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் கேட்டுக் கொண்டார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 2 மாதங்களாகி விட்டது. இதனால் உக்ரைனில் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர் தொடங்கிய சில நாட்களிலேயே கீவ் தலைநகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வர உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கீவை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.