ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனின் மரியுபோல் நகரம் விடுதலை பெற்று விட்டது - ரஷ்ய அதிபர் புடின்

ச. முத்துகிருஷ்ணன்

உக்ரைனின் துறைமுக நகரமான “மரியுபோல்”-ஐ ரஷ்யப் படைகள முழுமையாக கைப்பற்றிய நிலையி;ல், அந்நகரம் வெற்றிகரமாக விடுதலை பெற்று விட்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான “மரியுபோல்”-ஐ ரஷ்யப் படைகள் முழுமையாக கைப்பற்றிய நிலையில், அந்நகரம் முழுவதும் வெற்றிகரமாக விடுதலை பெற்று விட்டதாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அந்நகரில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியான அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பதுங்கியுள்ள நிலையில் அந்த ஆலையை ரஷ்யப் படைகள் தாக்க வேண்டாமென ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த ஆலையில் ஒரு ஈ கூட தப்பிக்க முடியாதபடி பாதுகாப்பாக அந்த ஆலையை கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக பிப்ரவரியில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் "சுதந்திரத்தை" ரஷ்யா ஒப்புக்கொண்டது. அதன்பிறகு, பிப்ரவரி 24 அன்று புதின் உத்தரவை அடுத்து ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்தன. உக்ரைனின் முக்கிய தொழில் நகரங்களான கீவ், மரியுபோல், புச்சா ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. கிட்டத்தட்ட இரு மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், புடின் இன்று மரியுபோல் சுதந்திர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.