ரஷ்யா - உக்ரைன்

900 பொது மக்களை சுட்டுக்கொன்ற ரஷ்ய படைகள்? - உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு

Veeramani

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 900 பொது மக்கள் சடலமாக கிடப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50ஆவது நாளை தாண்டியுள்ளது. ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி தந்து வருகின்றன. கருங்கடல் பகுதியில் நின்றிருந்த மோஸ்க்வா என்ற ரஷ்யாவின் பிரமாண்ட கப்பலை உக்ரைன் ஏவுகணையை செலுத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உக்ரைனும் ஒப்புக்கொண்டிருந்தது.



இந்நிலையில் தங்கள் நாட்டு தலைநகர் கீவ் சுற்றுப்புறங்களில் 900 சடலங்கள் கிடப்பதாக உக்ரைன் காவல் துறை தெரிவித்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக ரஷ்ய படைகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என உக்ரைன் காவல் துறை தெரிவித்துள்ளது. சடலங்களில் பெரும்பாலானவை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடங்கள் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கார்கிவ் நகரத்திள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்கியதில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.