ரஷ்யா - உக்ரைன்

"கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தாக்குதலை தொடங்கியது" - செலன்ஸ்கி தகவல்

"கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தாக்குதலை தொடங்கியது" - செலன்ஸ்கி தகவல்

Veeramani

கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவற்றுவதற்கான தாக்குதலை ரஷ்யா தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனை சேர்ந்த டான்பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் போரை தொடங்கி இருப்பதாகவும் இதற்காகவே அவர்கள் நீண்ட காலமாக தயாராக இருந்ததாகவும், இந்த தாக்குதலுக்காக ரஷ்ய ராணுவத்தின் பெரும் பகுதி கிழக்கு உக்ரைன் பகுதியில் குவித்திருப்பதாவும் செலன்ஸ்கி கூறினார். இதனிடையே லிவீவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தை உள்பட 7பேர் மரணம் அடைந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் லிவீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 7 வாரங்களையும் கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இருந்தபோதிலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் தனது போர் வியூகத்தை ரஷ்யா மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, வான் வழி தாக்குதல்களை குறைத்துவிட்டு கருங்கடலில் இருந்து உக்ரைனின் கடற்கரை நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிழக்கு பகுதிகளை எளிதில் வீழ்த்தி, தலைநகர் கீவ்வை கைப்பற்றிவிடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஆனால், உக்ரைன் கடற்படையினர் கடந்த சில தினங்களாக கருங்கடலில் மூர்க்கமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.