ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவு: இதுவரை நடந்தது என்ன?

EllusamyKarthik

கடந்த மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா , உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரமான மரியாபோலை கைப்பற்ற ரஷ்யா படைகள் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. போரில் இருந்து தப்பித்து 36 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டிலேயே 65 லட்சம் மக்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

கெர்சன் நகரம் மட்டும் ரஷ்யாவின் கட்டுக்குள் சென்றிருக்கிறது. தொடர்ந்து போர் நடைபெறும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளும் எடுபடவில்லை. இன்றுடன் போர் தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்து இரண்டாம் மாதம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் பைடன் இன்று பிரசல்ஸ் சென்று , நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ரஷ்யா மீதான கூடுதல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.