ரஷ்யா - உக்ரைன்

வான்வெளி தாக்குதலை மக்களுக்கு அலர்ட் செய்யும் கூகுளின் புதிய வசதி... விரைவில் அறிமுகம்

JustinDurai

உக்ரைனில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன் கூட்டியே மக்கள் அறியும் வகையில், ஆண்ட்ராய்டு போன்களுக்கான 'ஏர் ரெய்டு அல்ர்ட்' என்ற வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் சூழலில், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில், உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை தொடங்க இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி, 'ஏர் ரெய்டு அலர்ட்' வசதியை வெளியிட இருப்பதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்க: "சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது உக்ரைன்" - பிரான்ஸ் அதிபரிடம் புடின் குற்றச்சாட்டு