ரஷ்யா - உக்ரைன்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஜி7 நாடுகள் கூடுதல் ஆயுத உதவி

Veeramani

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கூடுதல் உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்க ஜி7 நாடுகள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளன.

பணக்கார நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஜி7 குழுவின் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரஷ்யாவை மேலும் உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டும், அது ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளம் என்று ஜெர்மனி கூறியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, உக்ரைனுக்கு உணவு, கூடுதல் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. அதே போல், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.



உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்பதற்காக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. முதலில் உக்ரைன் முழுவதும் தாக்குதலை நடத்திய ரஷ்யா, தற்போது கிழக்கு உக்ரைன் நகரங்களை தீவிரமாக தாக்கி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் பல்வேறு உதவிகளை செய்வதுடன், ரஷ்யா மீது எண்ணற்ற பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.