ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும், கனடாவும் தங்களது வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன.
உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டிக்கும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் ஒருங்கிணைந்து தங்களது நாட்டின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன.
மேலும், உக்ரைன் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வழங்கவும் முதல் முறையாக முடிவெடுத்துள்ளன. அதே போல் கனடாவும் தனது நாட்டின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையில் இணைவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.