உக்ரைனில் உள்ள திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் முன் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மரியபோல் நகரில் உள்ள திரையரங்கில் ரஷ்யப் படையினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும், அங்கு ஏற்கனவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் தஞ்சமடைந்திருந்ததாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி அந்த திரையரங்கை செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை மாக்ஸர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த திரையரங்கின் முன் குழந்தைகள் என்ற வார்த்தை ரஷ்ய மொழியில் தரையில் எழுதப்பட்டிருப்பதையும் அந்த புகைப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் தனது படைகளை குவிக்க தொடங்கிய ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.