ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனில் நினைத்தது நடக்கவில்லை கடுப்பில் இருக்கிறாரா புடின்? - அமெரிக்கா சூசகம்

Sinekadhara

உக்ரைனில் தங்கள் படைகள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புtஇ9ன் கடும் கோபத்திலும் விரக்தியிலும் இருப்பதாக தாம் கருதுவதாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை 2 நாட்களில் தங்கள் படைகள் வீழ்த்திவிடும் என புடின் நினைத்ததாகவும், ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் அது நடக்கவில்லை என்றும் சிஐஏ இயக்குநர் தெரிவித்தார். இந்த அதிருப்தியில் புடின் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி ஈவு இரக்கமின்றி பேரழிவுகளை நடத்த திட்டமிடக் கூடும் என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்தார். புடின் ஒருவேளை உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டாலும் கூட அதனால் அவர் முடிவில்லாத பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். வில்லியம் பர்ன்ஸ் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதராக பல ஆண்டுகள் மாஸ்கோவில் பணியாற்றியவர் என்பதும் புடினை பலமுறை நேரில் சந்தித்து பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.