ரஷ்யா - உக்ரைன்

விரைந்தது ஏர் இந்தியா: உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக எத்தனை பேர் மீட்பு?

விரைந்தது ஏர் இந்தியா: உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக எத்தனை பேர் மீட்பு?

Sinekadhara

போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களில் முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் போர் வலுத்துவரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும்பணியில் இந்தியா இறங்கியுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானத்தில் முதற்கட்டமாக சுமார் 470 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் தமிழர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பணி மற்றும் கல்வி நிமித்தமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல தரப்பினரும் அதில் உள்ளனர்.

உக்ரைனிலிருந்து ருமேனியா வந்த மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் மும்பை அழைத்துவரப்படுகின்றனர். 15க்கும் மேற்பட்ட கேரளர்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிது நேரத்தில்மற்றொரு ஏர் இந்தியா விமானமும் ருமேனியாவை சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.