ரஷ்யா - உக்ரைன்

ருமேனியா எல்லையில் தவிக்கும் 300 தமிழக மாணவர்கள்: மீட்பு எப்போது என காத்திருக்கும் சோகம்

Veeramani

ருமேனியாவுக்குள் அனுமதிக்காததால் உக்ரைன் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் உட்பட இந்தியர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

உக்ரைனிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, ருமேனிய எல்லையில் விமானத்திற்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் காத்திருப்பதாகவும், ஆனால் இந்திய தூதரகத்திலிருந்து தொடர்புகொள்ளவில்லை என எல்லையில் இருக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், 48மணி நேரத்திற்கும் மேலாக, கடுங்குளிரில் தவிப்பதாகவும், இதனால் உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.