புதுப்பிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களில், சிறிய சொகுசு செடானுக்கான இந்திய விலையை அறிவித்துள்ளது Rolls-Royce நிறுவனம்.
இந்த FaceLift கார் Standard, Extended மற்றும் Black BADGE ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது, மேலும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.95 கோடியில் தொடங்கி, ரூ.10.19 கோடி மற்றும் ரூ.10.52 கோடி என, விருப்பங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, கோஸ்ட் சீரிஸ் II நுட்பமான வெளிப்புற மாற்றங்களைப் பெறுகிறது, இதில் L-வடிவ LED DRLகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் திருத்தப்பட்ட முன்பக்க பம்பர் ஆகியவை அடங்கும். முன் பம்பரின் கீழ் கிரில் பகுதி சிறியது, மேலும் DRLகள் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களின் வெளிப்புறத்தை சுற்றியுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட கோஸ்டின் பின்புறம் டெயில்-லைட்கள் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளன. பின்புற பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை குரோம் எக்ஸாஸ்ட்கள் கொண்ட புதிய LED டெயில்லைட்களைக் கொண்டுள்ளது. மேலும் தேர்வு செய்ய இரண்டு 22-இன்ச் அலாய் வீல் விருப்பங்களை வழங்குகிறது.
உட்புறம், டாஷ்போர்டில் இப்போது ஒரு கண்ணாடி பேனல் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்-கார் கனக்ட்டிவிட்டி சிஸ்டமை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. மேலும், பின் இருக்கையில் உள்ள என்டேர்டைன்மெண்ட் சிஸ்டம் தற்போது வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ஆதரிக்கிறது.
மேலும் உட்புறத்தில், ஃபேஸ்லிஃப்ட் கிரே ஸ்டெயின்ட் ஆஷ் மற்றும் டூயலிட்டி ட்வில் ஆகிய புதிய மெட்டிரியல் விருப்பங்களைப் வழங்குகிறது, சராசரியாக கோஸ்ட் காரை வாங்குபவர் தன காரின் விலையில் 10 சதவீதத்தை தனிப்பயன்களுக்காக செலவிடுகிறார் என்று ரோல்ஸ் ராய்ஸ் கூறுகிறது. சுமார் 17.7 கிமீ நூல் கொண்டு 2.2 மில்லியன் தையல்களுடன் முழு டூயலிட்டி ட்வில் உட்புறத்தை வடிவமைக்க 20 மணிநேரம் ஆகும் என்றும் அந்த பிராண்ட் தெரிவித்துள்ளது.
கோஸ்ட் ஃபேஸ்லிஃப்டை இயக்குவது அதே 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 இன்ஜின்தான். இது 555 BHP மற்றும் 850 Nm ஐ உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் பிளாக் பேட்ஜ் வேரியண்ட் 584 BHP மற்றும் 900 Nm வழங்குகிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெறுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டன, மேலும் டெலிவரி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.