சிக்னேச்சர் லைம் கிரீன் மற்றும் மியூட்டட் பேட்டில் கிரே ஆகிய இரு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த பைக், கவாஸாகியின் முதல் இந்திய ரோடு-லீகல் ஆஃப்ரோடு பைக் ஆகும்.
அம்சங்கள்:
இந்த KLX230 பைக் ஹெக்சாகோனல் ஹெட்லைட்கள், ஸ்லிம் சிங்கிள் சீட் மற்றும் 7.6 லிட்டர் எரிபொருள் டேங்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதல் அம்சங்களில் புளூடூத் இணைப்புடன் Monotone LCD மற்றும் விருப்பத்திற்கேற்ப குறைந்த இருக்கை உயரம் ஆகியவை அடங்கும். இந்த KLX230 பைக் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 18.1 ஹெச்பி மற்றும் 18.3 என்எம் உற்பத்தி செய்யும் 233சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்:
சஸ்பென்ஷன் பொறுத்தவரை, முன்புறத்தில் 240mm ட்ராவலை வழங்கும் 37mm டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் 250mm ட்ராவலை வழங்கும் ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ட்வின் பிஸ்டன் காலிப்பர்களுடன் 265mm Front Disc Brake மற்றும் சிங்கிள் பிஸ்டனுடன் 220mm Back Disc Brake கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, Switchable டூயல்-சேனல் ஏபிஎஸ்ஸை வழங்குகிறது.
முன்பதிவு மற்றும் வெளியீடு:
இந்த பைக்கை ரூ.5,000 செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டெலிவரி இம்மாத இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
21-இன்ச் முன் மற்றும் 18-இன்ச் பின்புற வயர்-ஸ்போக் சக்கரங்களை கொண்டுள்ள இந்த கவாஸாகி KLX 230 பைக்கிற்கு, கிராஷ் ப்ரொடெக்ஷன், ஹேண்டு கார்டு, லக்கேஜ் ரேக் மற்றும் USB-C சார்ஜர் எனப் பல்வேறு கூடுதல் உபகரணங்களை விற்பனை செய்கிறது கவாஸாகி.
இந்த KLX230 பைக் ஆனது, கவாஸாகி நிறுவனம் உள்நாட்டில் தயாரித்த நிஞ்ஜா 300 மற்றும் W175 மோட்டார் சைக்கிள்களின் வரிசையில் இணைந்துள்ளது.