ஹோண்டா தனது ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இப்போது வரவிருக்கும் OBD2B விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளது, மேலும் இது ஒரு புதிய TFT டிஸ்ப்ளேவையும் பெறுகிறது.
- புதிய 4.2 இன்ச் TFT டிஸ்ப்ளே
- USB-C சார்ஜிங் போர்ட்
தற்போதைய ஆக்டிவா 125-யில் எல்சிடி டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறோம், ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஸ்கூட்டரில் 4.2-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவை வழங்குகின்றனர். கால் அலர்ட்கள் மற்றும் நாவிகேஷன் அசிஸ்ட் போன்ற செயல்பாடுகளை செயல்படுத்தும் ஹோண்டாவின் RoadSync பயன்பாட்டுடன் இந்த டிஸ்ப்ளே இணக்கமானது. மேலும் இந்த ஸ்கூட்டர் USB C சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது.
இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்கூட்டர் பெரும்பாலும் தற்போதைய Activa 125 போன்றே இருந்தாலும்; இந்த வண்டி கூடுதலாக 2025 இல் நடைமுறைக்கு வரும் மேம்படுத்தப்பட்ட OBD2B விதிமுறைகளுக்கு ஏற்றவாறு உள்ளது.
இந்த வண்டி 8.4hp மற்றும் 10.5Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 123.9cc ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின்னை கொண்டுள்ளது.
2025 ஹோண்டா ஆக்டிவா 6 வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் DLX வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.94,442 ஆகும், அதே சமயம் Key Fob மற்றும் Keyless Ignition கூடிய H-ஸ்மார்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 97,146 ஆகும். இது தற்போதைய Activa 125 இன் விலையை விட அதிகம்.
இருப்பினும், ஹோண்டா தற்போது இரண்டு வேரியண்ட்டுகளை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முன்பக்க டிரம் பிரேக் போன்ற எளிமையான அம்சங்கள் கொண்ட மலிவு விலை வேரியண்ட் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.