சோனி ஹோண்டா மொபிலிட்டி (SHM) கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அஃபீலா 1 என்ற மின்சார செடானின் உற்பத்தியை தொடக்கவிருக்கிறது. லாஸ் வேகாஸில் நடைபெற்ற CES 2025 நிகழ்ச்சியில், எலக்ட்ரிக் காரின் விலையையும் அதிகாரப்பூர்வமாக மாடல் பெயரையும் அறிவித்தனர். இந்த கார், 2026ம் ஆண்டின் மத்தியில் வாடிக்கையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருவேரியண்ட்களில் அறிமுகமாகும் இந்த காரின் ஆரிஜின் டிரிம் விலை சுமார் ரூ.77.6 லட்சம் ஆகும், அதேசமயத்தில் விலையுயர்ந்த சிக்னேச்சர் டிரிம் விலை சுமார் ரூ.88.9 லட்சம் ஆகும். EVயின் உற்பத்தி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டுமே துவங்கியுள்ளது, அடுத்த ஆண்டு முதல் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Calm White, Core Black, and Tidal Gray என மூன்று வண்ண விருப்பங்களை கொண்டுள்ள அஃபீலா 1-ன் அழகு என்றால் எந்த அலங்கார கோடுகளும் இல்லாமல் வெளிப்புறத்தைக் கொண்டுள்ள நேர்த்தியான தோற்றம் ஆகும். Advance Al, Self Driving மற்றும் Premium Design ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இந்த வாகனத்தின் சிக்னேச்சர் டிரிம் 21-இன்ச் சக்கரங்கள், Center Camera Monitoring System மற்றும் Rear Entertainment System கொண்டுள்ளது. இதனுடன், வாகனத்தின் இரண்டு டிரிம்களும் 40 சென்சார்கள் மற்றும் Afeela Personal Agent எனப்படும் voice assistant-ஐ கொண்டுள்ள Level 2+ driver assistance system எனும் Afeela Intelligent Drive-ஐ கொண்டுள்ளது.
அஃபீலா 1 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் செல்லும் 91 kWh lithium-ion battery pack உடன் வருகிறது. பேட்டரியில் சேமிக்கப்படும் சக்தி ஒவ்வொரு அச்சிலும் வைக்கப்பட்டுள்ள இரண்டு 241 hp மின்சார மோட்டார்களால் பயன்படுத்தப்படுகிறது. இது AWD Powertrain மற்றும் Air Suspension-ஐ பெறுகிறது. டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நெட்வொர்க்கைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட NACS-பாணி சார்ஜிங் போர்ட் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்யலாம்.