KIA CARENS CLAVIS EV KIA
கார்

வந்தாச்சு Carens Clavis EV... எவ்வளவு விலை... என்ன ஸ்பெஷல்..!

ஜூலை 22, 2025 முதல் KIA CARENS CLAVIS EV கார்களை புக் செய்யலாம்.

PT digital Desk

KIA CARENS CLAVIS EV இந்தியாவில் நேற்று (ஜூலை 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கியாவின் முதல் மாஸ் மார்க்கெட் மின்சார 7-சீட்டர் எம்பிவி (MPV) ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த EV, கேரன்ஸ் கிளாவிஸ் பெட்ரோல்/டீசல் மாடலின் மின்சார பதிப்பு ஆகும். இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை பற்றி விரிவாக பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள்

ஏரோடைனமிக் டிசைன்: கேரன்ஸ் கிளாவிஸ் EV, கிளோஸ்-அப் க்ரில், LED டி.ஆர்.எல், ஐஸ் கியூப் LED ஃபாக்லைட், ஸ்டார் மேப் LED டெயில் லேம்ப், ஏரோ டைனமிக் 17-இன்ச் அலாய் வீல்ஸ் போன்றவற்றுடன் வெளிப்புறத்தில் தனித்துவமான டிசைனை கொண்டுள்ளது. பேனராமிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் ஃப்ரங்க் (25 லிட்டர்) போன்றவை இதன் தனித்தன்மைகள்.

KIA CARENS CLAVIS EV interior

இன்டீரியர் & தொழில்நுட்பம்: இரட்டை 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, டச் கண்ட்ரோல் க்ளைமேட், 8-ஸ்பீக்கர் Bose ஸவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்ஸ், பவர் டிரைவர் சீட், 64-கலர் அம்பியண்ட் லைட், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜர் போன்றவை இன்டீரியரில் உள்ளன.

இரண்டாவது வரிசை சீட்: ஒன்-டச் இலகுவான மூன்றாவது வரிசை அணுகல், இரண்டாவது வரிசை 60:40 ஸ்ப்ளிட், ஸ்லைடிங் & ரீக்ளைனிங் சீட்ஸ், மூன்றாவது வரிசை 50:50 ஸ்ப்ளிட் & ஃபுல் ஃப்ளாட் ஃபோல்டிங் போன்றவை குடும்பத்திற்கு ஏற்றவாறு உள்ளன.

சேஃப்டி: 6 ஏர் பேக்ஸ் (எல்லா வேரியண்டுகளிலும் ஸ்டாண்டர்ட்), ABS, ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், TPMS, ஆல்-போர் டிஸ்க் பிரேக்ஸ், லெவல் 2 ADAS (உயர் வேரியண்டுகளில் மட்டும்), 360° கேமரா, விர்ச்சுவல் இன்ஜின் சவுண்ட் சிஸ்டம் போன்றவை உள்ளன.

பவர்டிரைன் & சார்ஜிங்: 42 kWh மற்றும் 51.4 kWh லித்தியம்-அயன் பேட்டரி வசதிகளுடன் இந்த கார்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 42 kWh மாடல் 404 km ரேஞ்ச் (ARAI), 51.4 kWh மாடல் 490 km ரேஞ்ச் (ARAI) தருகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜர் (100 kW) மூலம் 10-80% சார்ஜ் 39 நிமிடங்களிலும் , AC சார்ஜர் (11 kW) மூலம் 4-4.5 மணி நேரத்திலும் முழு சார்ஜ் ஆகும். மோட்டார் பவர் 133 bhp (42 kWh) மற்றும் 169 bhp (51.4 kWh) உள்ளது. வெல்யூ-டு-லோட் (V2L), வெல்யூ-டு-வெல்யூ (V2V) சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

இதர அம்சங்கள்: டூயல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஃபுட்வெல் லேம்ப், கனெக்டட் கார் டெக்னாலஜி, பல மொழிகளில் வாய்ஸ் கமாண்ட், ஃபைண்ட் மை கார், டைர் பிரஷர் மானிட்டர் போன்றவை உள்ளன.

விலை (Ex-Showroom, இந்தியா)

KIA CARENS PRICE

புக் செய்யும் தேதி: ஜூலை 22, 2025 முதல் புக் செய்யலாம்.

போட்டியாளர்கள் : ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், BYD eMax 7, மஹிந்த்ரா XUV700 EV .


கலர் விருப்பங்கள்: க்ளேசியர் வைட் பேர்ல், ப்யூட்டர் ஓலிவ், ஆரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ, ஐவரி சில்வர் மேட், கிராவிட்டி கிரே .

ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்: இன்ட்ரூஸ்டர் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட், கார் ஃபீச்சர்ஸ் அப்டேட் செய்யக்கூடியது.

பீஸ் ஆஃப் மைண்ட்: 3 வருடம் 24/7 ரோட்சைடு அசிஸ்டன்ஸ், கியா கனெக்ட் சர்வீஸ் போன்றவை.