ஹோண்டா நிறுவனம் புதிய Hybrid-Electric "Honda Prelude" ஸ்போர்ட் காரை அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளது. 1978ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இதே பெயரில் இரண்டு டோர்கள் கொண்ட காரை விற்பனை செய்து வந்த நிலையில் 2001ம் ஆண்டு முதல் Prelude காருக்கு மாற்றாக அக்கார்டு காரை அறிமுகப்படுத்தியது ஹோண்டா நிறுவனம். தற்போது மீண்டும் Prelude என்ற பெயரில் புதிய ஸ்போர்ட் காரை ஹோண்டா உருவாக்கி வருகிறது.
Prelude முதன்முதலில் நவம்பர் 1978 இல் தொடங்கப்பட்டது மற்றும் அதன் ஸ்போர்ட்டி வடிவமைப்புக்காகவும், செயல்திறனுக்காகவும் பிரபலமானது. அதன் ஐந்து தலைமுறைகளாக வாகனத் துறையில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும், நான்கு சக்கர ஸ்டீயரிங் (4WS) மற்றும் ஆக்டிவ் டார்க் டிரான்ஸ்ஃபர் சிஸ்டம் (ATTS) ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய "Honda Prelude" ஸ்போர்ட் கார் வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் வெளியிடப்படும் என ஹோண்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் புதிய S+ ஷிப்ட் தொழில்நுட்பத்தை Prelude காரில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலையான e:HEV பவர்டிரெய்னை பயன்படுத்தி Jazz, Civic, HR-V, ZR-V மற்றும் CR-V போன்ற கார்களின் எலக்ட்ரிக் ரேஞ்சை அடையும்.
இந்த கார் குறித்து ஹோண்டா மோட்டாரின் மூத்த துணைத் தலைவர் கூறுகையில்:
இந்த Prelude மாடல் எங்கள் வர்த்தகத்தில் முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஐரோப்பாவில் இதுவரை கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து ரீ எண்ட்ரிக்காக நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் அமெரிக்க ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என 2025 ஆம் ஆண்டில் சந்தைக்கு வருவதை உறுதிப்படுத்தினார்.
ஹோண்டா சிவிக் மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த "Prelude" மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு டோர்கள் கொண்ட ஸ்போர்ட் கூபே இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு இல்லை. ஆனால் ஹோண்டா சிட்டியின் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹோண்டா நிறுவனம். அதனைத் தொடர்ந்து, அப்டேட் செய்யப்பட்ட புதிய அமேஸ் மாடலின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.