ஆடி கார் முகநூல்
கார்

AUDI கார் பிரியர்களுக்கு வந்த அதிர்ச்சி அறிவிப்பு; நிறுவனம் சொன்னதென்ன?

ஆடி கார்களின் விலை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3 சதவிகிதம் உயரப்போகிறது. இதனை ஆடி தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது.

PT WEB

ஆடி கார்களின் விலை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3 சதவிகிதம் உயரப்போகிறது. இதனை ஆடி தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது.

ஜெர்மனைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனம் மற்றும் டீலர்களின் சீரான வளர்ச்சிக்கு இந்த விலை ஏற்றம் அவசியம் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பால்பிர் சிங் திலான், வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் சிறிய அளவிற்கே விலையை உயர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதைப்போல, BMW இந்தியா நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருப்பது கவனம்பெறுகிறது.