வெற்றிதுரைசாமி புகைப்படங்கள்
வெற்றிதுரைசாமி புகைப்படங்கள் Insta / vetriduraisamy
லைஃப்ஸ்டைல்

’இதெல்லாம் இவர் எடுத்த புகைப்படங்களா!’ - இயற்கையை அதிகமாய் நேசித்த வெற்றி துரைசாமி! வைரல் ஃபோட்டோஸ்!

Rishan Vengai

சென்னையின் முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணம் சமீபத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தன் நண்பருடன் இமாச்சலப் பிரதேசம் சென்ற வெற்றி துரைசாமி, அங்கு கஷாங் என்ற பகுதியில் நடந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். முதலில் அவருடைய மரணம் உறுதிசெய்யப்படாத நிலையில், 8 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவரின் இறந்த உடல் மீட்கப்பட்டது. மகன் வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு தந்தை சைதை துரைசாமி தரப்பிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்பட்டது.

இயற்கை மீது தீராக்காதல் கொண்ட வெற்றிதுரைசாமி!

இயற்கை மீது தீராக்காதல் கொண்டவராக இருந்த வெற்றிதுரைசாமி, இயற்கை ஆர்வலராகவும், ஒரு சாகச விரும்பியாகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் புகைப்படக் கலைஞராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருந்த அவர் இயற்கையின் அழகை தேடித்தேடி அலைந்து பல்வேறு உயிர்களின் வாழ்வியலை புகைப்படம் எடுத்துள்ளார்.

vetriduraisamy

அதேபோல கடந்த 2021-ம் ஆண்டு “என்றாவது ஒரு நாள்” என்ற திரைப்படத்தை வெற்றிதுரைசாமி இயக்கியிருந்தார். நடிகர்கள் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு 43 விருதுகளை வென்றது. இத்திரைப்படத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர்ப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்த என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.

Insta / vetriduraisamy

நிஜத்தில் மனிதநேயம் கொண்டவராக இருந்த வெற்றி துரைசாமி, தன்னுடைய முதல் திரைப்படத்திலும் அதனை வெளிப்படுத்தியிருந்தார். உலக மயமாக்கத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடைக்கோடி கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினையை கையில் எடுத்திருந்த அவர், ஒரு விவசாயிக்கு அவனுடைய விவசாயமும் அவன் வைத்திருக்கும் மாடுகளின் வாழ்வாதாராமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இயல்பாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருந்தார். ஒரு முன்னணி ஊடகத்தளத்தின் திரைப்பட விமர்சகர், "நல்ல நோக்கத்துடன் மட்டும் படம் எடுக்க வேண்டாம்" என்று எழுதுமளவு அவருடைய களத்தின் கதை அமைந்திருந்தது.

வெற்றிதுரைசாமியின் பல்லுயிர்களின் வாழ்வியல் புகைப்படங்கள்!

”வெற்றி”துரைசாமி என்ற பெயருக்கேற்ப ஒரு இயக்குநராக முதல் படத்திலேயே வெற்றிபெற்றது மட்டுமில்லாமல் ஒரு புகைப்படக்கலைஞராகவும் வெற்றிபெற்றுள்ளார். இயற்கையோடு சேர்ந்து பயணித்த அவர், தான் எடுத்த புகைப்படங்களில் பல்வேறு உயிர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பிவழிகின்றன.

இதெல்லாம் அவர் எடுத்த புகைப்படங்களா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன!

vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / insta
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography
vetriduraisamy / Wildlife photography