பெண்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பளப்பளப்பாகவும் பராமரிக்க தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து கொண்டேதான் இருப்பார்கள்.. அதிலும் சிலர் சத்தான உணவுகளை தலை முடிக்காக தேடி தேடி சாப்பிடுவார்கள்.. தலைமுடி பராமரிப்பு என்றாலே பலருக்கும் எண்ணெய், ஷாம்பு, ஹேர் மாஸ்க்குகள் போன்றவைதான் நினைவிற்கு வரும்.
ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன், தனது அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தலுக்கு ஒரு எளிய பாரம்பரியமான எண்ணெயை தான் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார்.. அவர் குறிப்பிட்ட அந்த எண்ணெய் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் நல்லெண்ணெய்தான் அது. ஆம் நடிகை ஸ்ருதி ஹாசன், தனது நீண்ட, அடர்த்தியான கூந்தலின் ரகசியத்திற்கு நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய்தான் காரணம் என்று மனம் திறந்து பேசியுள்ளார்..
நடிகையும், பாடகியுமான இந்திய திரையுலகின் நட்சத்திரமான நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ’தி ரன்வீர் ஷோ’ பாட்காஸ்டில் (ஜூலை 11) தோன்றினார், அங்கு அவர் தனது கூந்தல் பராமரிப்பு ரகசியத்தை பற்றி பகிர்ந்துக்கொண்டார்.. ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் வெளிப்படுத்தும் நீண்ட, கருப்பு நிற முடியை கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன் தனது கூந்தல் பராமரிப்பு எவ்வளவு எளிமையானது என்பதை பகிர்ந்துகொண்டார்..
அப்போது பேசியவர், தனது கூந்தலுக்கு தான் நல்லெண்ணெய் பயன்படுத்துவதாக தெரிவித்தார். சில நேரங்களில் நல்லெண்ணையை தேங்காய் எண்ணெய் உடனோ, அல்லது பாதாம் எண்ணெயுடனோ கலந்து பயன்படுத்துவதாகவும் கூறினார். முதல் நாள் இரவில் தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் தலைக்கு குளிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதனைத் தொடர்ந்து பேசியவர், இதுதான் தனது இயற்கையான கூந்தலின் ரகசியம் என்றும், தான் வேறு எந்த விலை உயர்ந்த சலூனிலும் சிகிச்சை பெறவில்லை என்றும் ஸ்ருதி ஹாசன் திட்டவட்டமாகக் கூறுகிறார். மேலும் ஸ்ருதி ஹாசன் “ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிப்பதற்கு முன்பு நான் என் தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறேன்," என்றார். அத்துடன் “நான் தினமும் தலைமுடியைக் வாஷ் பண்ணுவதில்லை எனவும் தலைக்கு குளிக்கும் முன், முதல் நாள் இரவு எண்ணெயைத் தடவி, அதனுடன் தூங்கி, காலையில் வாஷ் பண்ணுவேன் என்றார்..
1. நல்லெண்ணெயில் பலவிதமான ரகசியங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது முடிக்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
2 .நல்லெண்ணெய் முடியை வலிமையாகவும், உறுதியாகவும் வைட்திருக்கும்.
3. முடியில் உள்ள வறட்சியைத் தடுக்கிறது மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
4. மேலும், நல்லெண்ணெய் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. நல்லெண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கிறது எனலாம்..
5. இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த நல்லெண்ணெயை அதிகமாக பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..