மணிபல்லவம்
வாசு முருகவேல்
பதிப்பகம்: நீலம்
இலங்கையில் நடந்த போரின் பின்னணியில் அங்குள்ள தமிழர்களால் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நாவல்களுள் இந்நூலும் ஒன்று. இலங்கை நயினா தீவின் கதையை அந்தத் தீவின் மனிதர்களின் கதையை இந்த நாவல் சொல்கிறது. ஈழ அரசியலின் வெவ்வேறு அடுக்குகள் இந்த நாவலில் வெளிப்பட்டுள்ளன.
யானை டாக்டர் கே
சந்துரு
பதிப்பகம்: கிழக்கு
யானை டாக்டர் என்று அழைக்கப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைக் கதையை விரிவாக இந்த நூல் பேசுகிறது. மக்களோடும் யானைகளோடும் பயணித்த ஒரு லட்சியவாதியின் சரித்திரம் இந்த நூல். முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க ஒரு வாழ்வைச் சித்தரிக்கும் நூல் இது.
நீர்மம்
முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம்: நாற்கரம்
சுரண்டப்படும் தாமிரபரணியின் கதையைச் சொல்லும் நாவல் இது. நதி எவ்வாறு மாசுபடுகிறது, யாரால் அழிவைச் சந்திக்கிறது, நாம் ஏன் நதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி இந்த நாவல் பேசுகிறது.
ருசிபேதம்
ஷாநவாஸ்
பதிப்பகம்: யாவரும் பப்ளிஷர்ஸ்
உணவுக் கலாச்சாரத்துடன் வரலாறு, அரசியல் போன்ற கூறுகளைக் கலந்து பேசும் கட்டுரைத் தொகுப்பு இது. சிங்கப்பூர் தொடங்கி பல நாடுகளின் உணவுகள் குறித்தும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உணவு இனங்களை எப்படி இணைக்கிறது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்
கார்லோ ரொவெல்லி
தமிழில்: சங்கரன் ரவிச்சந்திரன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு
இயற்பியல் தனது கவிஞனைக் கண்டடைந்துவிட்டது என்று புகழப்படும் எழுத்தாளர், இயற்பியலாளர் கார்லோ ரொவெல்லியின் சிறு நூல் இது. ஐன்ஸ்டைனில் தொடங்கி, பிரபஞ்சம், கருந்துளைகள், மனிதர்கள் என்று முக்கியமான கருப்பொருள்களைப் பற்றிப் பேசும் நூல் இது.