home loan
home loan file image
லைஃப்ஸ்டைல்

இது தெரியாம வீட்டுக்கடன் வாங்காதீங்க..!

PT WEB

கோட்டையைக் கட்டாவிட்டாலும், சொந்தமாக ஒரு வீட்டையாவது கட்ட வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானவர்களின் கனவு. இந்தக் கனவை நிறைவேற்ற தற்போது பல வங்கிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கடனை வழங்கி வருகின்றன. 30 ஆண்டுகள் வரை மாதத்தவணை செலுத்த வங்கிகள் வாய்ப்பு கொடுப்பது வீடு வாங்குவதில் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது சில நிதி நிறுவனங்கள் 40 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்குகின்றன. இதனால், மாதத்தவணை கணிசமாகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த 40 ஆண்டுகளையும் முழுமையாக எடுத்துக்கொண்டால் வங்கிக்குச் செலுத்தும் தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

தற்போது 8.5% லிருந்து 10.25% வரை வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நபர் வங்கி ஒன்றில், 9.5 சதவீத வட்டியில், 50 லட்சம் ரூபாயை வீட்டுக்கடனாக பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் முழுக் காலத்திற்கும் மாதத்தவணை செலுத்துகிறார். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள் என்றால் 77 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும்.

ஆண்டுகள், 20 - 40 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொண்டால், அந்த நபர் செலவுகளுடன் சேர்த்து சுமார் 2 கோடி ரூபாயை வங்கிக்குச் செலுத்த வேண்டியிருக்கும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வாங்கிய சொத்து மதிப்பு அதிகரித்திருக்கும் என்றாலும், கடனைத் திருப்பி செலுத்திய தொகை அளவிற்கு உயர்ந்திருக்குமா என்பதை கவனிக்க வேண்டும்.

எனவே, வீட்டுக் கடன் பெறும் நபர், தங்களால் முடிந்த தொகையை கடனின் அசலில் செலுத்த வேண்டும் என்கின்றனர் துறைசார்ந்த நிபுணர்கள். அப்படி செய்யும்பட்சத்தில், விரைவாகவே கடனை அடைத்து வீட்டுப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டுக்கடன் பற்றிய பிரச்னைகளில் இருந்து தப்புவதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.