Tamil Nadu food FB
லைஃப்ஸ்டைல்

சுவையோ சுவை | தமிழ்நாட்டின் பேமஸான 5 உணவு வகைகள்..! இதோ லிஸ்ட்..!

தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகைகள் பற்றியும் சில இனிப்பு பலகாரங்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்..

Vaijayanthi S

இந்தியாவில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு கூடுதலான பெயர் போனது. இங்கு காலையில் கிடைக்கும் மல்லி பூ இட்லி முதல் இரவு கிடைக்கும் விருதுநகர் பொரிச்ச பரோட்டா வரை அனைத்துமே சும்மா சூப்பராக இருக்குமென்றே சொல்லலாம்.. வாங்க இந்த பதிவில் தமிழ்நாட்டில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் மக்களால் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்..

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

Halwa

திருநெல்வேலினா அல்வா. அல்வானா திருநெல்வேலி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பேமஸ். இந்த அல்வா எப்படி செய்யப்பட்டது என்பதற்கு ஒரு குட்டி கதை உள்ளது.. அதாவது திருநெல்வேலியில் உள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்தியாவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அல்வா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்படி சாப்பிட்ட அந்த அல்வாவின் மனமும் சுவையும் அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால் அங்கு அல்வா செஞ்சவரையே திருநெல்வேலிக்கு கூப்பிட்டு வந்து அதே மாதிரியே அல்வாவை செய்ய சொல்லி இருக்கிறார்.. அப்போதிலிருந்து திருநெல்வேலியில் அல்வா செய்ய ஆரம்பிச்சாச்சு. தமிழ்நாடு வருகிறவர்கள் இந்த திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டும் வாங்கியும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மதுரை மட்டன் தோசை

Mutton dosa

மதுரையில் மீனாட்சி அம்மன், அழகர் முதல் ஜிகர்தண்டா வரையில் எக்கசக்கமான பேமஸான விஷயங்கள் இருந்தாலும், சாப்பாடு பிரியர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரை மட்டன் தோசைதான். அதனை கறி தோசை என்றும் சொல்லுவார்கள். மதுரைக்கு சென்றால் இந்த மட்டன் கறி தோசையை ட்ரை பண்ணாமல் வராதீர்கள்.. இந்த மட்டன் தோசையை மதுரையில் உள்ள கோனார் சூப் கடையில் வாங்கி சாப்பிட்டால் டேஸ்டாக இருக்கும்..

ஆம்பூர் பிரியாணி

Ambur biriyani

அசைவ உணவுகளில் மிகவும் பிரபலமானது பிரியாணிதான். அதிலும் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமானது. ஆம்பூர்னா பிரியாணி, பிரியாணினா ஆம்பூர் என்று சொல்லும் அளவிற்கு இது தமிழகத்தில் ரொம்ப ஃபேமஸ். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் போடப்படும் மசாலா வகைகள்தான். இந்தியாவின் பாரம்பரிய மசாலாப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் தனித்துவமான பொருட்கள் ஆகியவற்றை அளவோடு கலந்து செய்வதே இந்த ஆம்பூர் பிரியாணியாகும். இந்த கலவையானது அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்கு வழிவகுக்கிறது.

ஃபில்டர் காபி

filter coffee

தமிழ்நாட்டில் ஃபில்டர் காபி ரொம்பவே ஃபேமஸ். காலையில் தூங்கி எழுந்தவுடனேயே ஃபில்டர் காபி குடிப்பவர்கள் ஏராளம். அப்படி காலையிலேயே காபி குடிக்காவிட்டால் அன்றைய தினமே வேஸ்டாகி விட்டது என்ற அளவிற்கு இங்கு காபி பிரியர்கள் உள்ளனர். அதிலும் காபியை ஃபில்டர் காபியாகதான் குடிக்க வேண்டும் என்றே பலர் இருக்கிறார்கள்.. தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஃபில்டர் காபி கிடைக்கும். அதிலும் கும்பகோணம் ஃபில்டர் காபி என்றாலே தனிச்சுவைதான். இதை குடிப்பதினால் மனமும் உடலும் புத்துணர்வு அடைக்கிறது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆம் தமிழகம் வந்தால் ஃபில்டர் காபி குடிக்காமல் போகாதீர்கள்..

பொரிச்ச பரோட்டா

Parotta

தமிழகத்தில் என்னதான் இட்லி தோசைனு சாப்பிடுபவர்கள் இருந்தாலும், பிரியாணி பிரியர்கள் இருந்தாலும் பரோட்டவுக்குனு அதிகமான ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். அதிலும் பரோட்டா என்றால் பல வகைகள் உள்ளன. ஆனால் அதில் பொரிச்சா பரோட்டாவை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். இந்த பரோட்டாவை எந்தவிதமான சைடிஸ்ம் இல்லாமல் அப்படியே மொறு மொறுனு சாப்பிடலாம். இவை தவிர தமிழ்நாட்டில் புளியோதரை, ரசம், மட்டன் கோலா உருண்டை, இட்லி சாம்பார், பொங்கள், பருப்பு பாயாசம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு என இதன் லிஸ்ட் நீண்டுக் கொண்டே போகும்..