இஸ்ரோவில் விஞ்ஞானி/ இன்ஜினியர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (ISRO Recruitment 2025) வெளியாகியுள்ளது. மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
விண்ணப்ப காலக்கெடு: மே 27 முதல் ஜூன் 16, 2025 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
வயது தகுதி: ஜூன் 16, 2025 நிலவரப்படி 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.
இஸ்ரோ குரூப் -ஏ பதவிகளான விஞ்ஞானி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 10 கீழ் சம்பளம் வழங்கப்படும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் BE/B.Tech பட்டம் (65% மதிப்பெண்கள்)
மெக்கானிக்கல் பொறியியலில் BE/B.Tech பட்டம் (65% மதிப்பெண்கள்)
கணினி அறிவியல் பொறியியலில் பட்டம் (65% மதிப்பெண்கள் அல்லது 6.84/10 CGPA)
அடிப்படை சம்பளம்: மாதம் ₹56,100
மொத்த சம்பளம்: அனுபவ படிகள் மற்றும் படிகள் உட்பட மாதம் ₹84,360
எழுத்துத் தேர்வு (120 நிமிடங்கள், இரண்டு பகுதிகள்)
பல தேர்வு வகை கேள்விகள் (எதிர்மறை மதிப்பெண் இல்லை)
தேர்ச்சிக்கு 50% மதிப்பெண்கள் தேவை
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1:5 விகிதத்தில் நேர்காணலுக்கு அழைப்பு
நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு (தேர்ச்சிக்கு 40% தேவை)
எழுத்துத் தேர்விற்கு அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
ISRO அதிகாரப்பூர்வ இணையதளம் (www.isro.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
₹750 (SC/ST/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு முழு தொகையும், பொது பிரிவினருக்கு ₹500 திரும்ப கிடைக்கும்).