இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த ஒப்புதல்

webteam

கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘விராஃபின்’, பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, கொரொனா நோய் தொற்று தடுக்கும் வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டை இங்கிலாந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் சீரம் நிறுவனம் அதன் விலையை அரசுக்கு 400  ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.