இந்தியா

ஐபிஓ மூலம் 8250 கோடி ரூபாய் திரட்ட சொமேட்டோ நிறுவனம் விண்ணப்பம்!

ஐபிஓ மூலம் 8250 கோடி ரூபாய் திரட்ட சொமேட்டோ நிறுவனம் விண்ணப்பம்!

EllusamyKarthik

ஐபிஓ (IPO)  மூலம் 8250 கோடி ரூபாய் திரட்ட விண்ணப்பித்துள்ளதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது!

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவினை டெலிவரி செய்து வருகிறது சொமேட்டோ நிறுவனம். கடந்த 2008இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 24 நாடுகளில் இயங்கி வருகிறது. சுமார் 5000 ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் அறிவிப்பு வெளியிட்டு தொழிலுக்கு திரட்டப்படும் நிதியான IPO மூலம் 8250 கோடி ரூபாய் திரட்ட பொதுமக்களிடம் விண்ணப்பித்துள்ளதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதிலும் கொரோனா தொற்று பேரிடர் ஏற்பட்டத்திலிருந்தே சொமேட்டோ மாதிரியான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக டிமெண்ட். அனைத்தும் ஆர்டர்கள் குவித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட சொமேட்டோ கடந்த நிதியாண்டில் மட்டுமே சுமார் 2960 கோடி ரூபாய் ஈட்டி இருந்தது. 

கடந்த பிப்ரவரி மாதம் மட்டுமே சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது சொமேட்டோ. 

அண்மையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வீட்டு முறை உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய சேவையையும் சொமேட்டோ தொடங்கி உள்ளது.