மும்பைப் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சுமாட்டோ முன்னேறியுள்ளது.
மும்பைப் பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள சென்செக்ஸ் குறியீட்டில் நிறுவனங்களின் 6 மாதகால சராசரி சந்தை மதிப்பை கணக்கிட்டு நிறுவனங்கள் பட்டியல் மாற்றப்படுவது வழக்கம்.
அந்தவகையில், ஜே.எஸ். டபிள்யூ நிறுவனத்திற்கு பதிலாக சுமோட்டோ சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெறுகிறது. இதுதொடர்பான, அறிவிப்பு வெளியானது, சுமோட்டோவில் துரித வணிக நிறுவனமான பிளிங்கிட்- டின் வேகமான வளர்ச்சி போன்றவைகளால் அந்நிறுவனத்தின் சந்தைமதிப்பு 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. டாடா மோட்டார்ஸின் சந்தைமதிப்பு 2 லட்சத்து 79 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் சந்தைமதிப்பைவிட சுமோட்டோவின் சந்தைமதிப்பு அதிகமாக உள்ளது.