இந்தியா

மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ் - குழு அனுப்பிவைப்பு

மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ் - குழு அனுப்பிவைப்பு

Sinekadhara

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு சுகாதாரக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவில் பெல்சார் என்ற கிராமத்தில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தொற்று அறிகுறிகள் இருக்கின்றனவா என்பது குறித்த சோதனைகளை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்தே பெல்சார் கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதில் 21 வயதான ஒருவருக்கு டெங்குவும், 50 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.