இந்தியர்களிடம் உணவுப்பழக்கம் மாறிப்போனதும் அதனால் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை பெருக்கியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
2024ஆம் ஆண்டில் நள்ளிரவில் 2 கோடி நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளை விநியோகம் செய்திருப்பதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ZEPTO தெரிவித்துள்ளது. நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணி வரையிலான நேரத்தில் தங்களுக்கு நொறுக்கு தீனி ஆர்டர் அதிகமாக கிடைத்ததாக ZEPTO தெரிவித்துள்ளது.
இதில், மும்பைவாசிகள்தான் அதிகளவாக 31 லட்சத்து 50 ஆயிரம் ஆர்டர்களை தங்களுக்கு கொடுத்திருப்பதாக ZEPTO கூறியுள்ளது. டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் இந்த ஆண்டில் 34 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருப்பதாகவும், இது பூமியை 8 ஆயிரம் முறை சுற்றிவருவதற்கு சமம் எனவும் ZEPTO தெரிவித்துள்ளது.