கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பழையங்காடி அருகே பள்ளிகரை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியிலுள்ள கடையில் சூயிங்கம் என்படும் மிட்டாயை வாங்கி வாயில் போட்டு கொண்டு தனது மிதிவண்டியை மிதிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த சூயிங்கம் குழந்தையின் தொண்டையில் சிக்கியதுடன் குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு நண்பர்களுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவரிடம் குழந்தை கையை தொட்டு உதவிகேட்டுள்ளார். குழந்தையின் நிலையை பார்த்து புரிந்து கொண்ட இளைஞர்கள், விரைந்து செயல்பட்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த சூயிங்கம்மை போராடி வெளியே எடுத்தனர். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றபட்டது. சமயோஜிதபுத்தியால் விரைவாக செயல்பட்டு குழந்தையின் உயிரை மீட்ட இளைஞர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.