இந்தியா

ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது

ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது

rajakannan

சபரிமலை ஐயப்பனை தவறாக சித்தரித்து முகநூலில் வீடியோ பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று முகநூலில் வேகமாக பரவி வந்தது. 

சம்மந்தப்பட்ட வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியினர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.