இந்தியா

"இளைஞர்களால் குடியுரிமை சட்டத்தை புரிந்துக் கொள்ளமுடியும்" பிரதமர் மோடி

jagadeesh

புதிய இந்தியாவை உருவாக்க நினைக்கும் இளைஞர்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்துக் கொள்ள முடியும் என்றும் ஆனால் அரசியலில்
திளைத்தவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக
பிரதமர் மோடி கொல்கத்தா சென்றுள்ளார். ஹவுராவில் உள்ள பெலூர் மடத்துக்கு சென்ற அவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த இடத்தை
பார்வையிட்டார். இதையடுத்து காலை பிரார்த்தனையில் பங்கேற்றார். முன்னதாக மடத்தில் உள்ள துறவிகளுடன் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையிலும்
அவர் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்வதற்காக கொண்டுவரப்பட்டதல்ல என பிரதமர் நரேந்திர
மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க
வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பியதை மோடி சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம்
கொண்டுவரப்பட்டதாகவும் இதை அரசியல் கட்சிகள் புரிந்துக்கொள்ள மறுப்பதாகவும் மக்களையும் தவறாக வழிநடத்துவதாகவும் மோடி கடுமையாகச்
சாடினார்.