இந்தியா

முறைத்து பார்த்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் - மும்பையில் 3 பேர் கைது

முறைத்து பார்த்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் - மும்பையில் 3 பேர் கைது

Sinekadhara

மும்பையில் முறைத்து பார்த்தற்காக 28 வயது இளைஞரை 3 பேர் அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மும்பையின் மாடுங்கா நகர் பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை பெல்ட் கொண்டு தலையில் அடித்ததுடன், குத்தி, அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் அங்கேயே நிலைகுலைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஷாகு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.