இந்தியா

‘நமோ’ ஆப் மூலம் தினமும் செய்தி அனுப்புகிறேன்.. யாரும் படிப்பதில்லை.. பிரதமர் ஆதங்கம்

‘நமோ’ ஆப் மூலம் தினமும் செய்தி அனுப்புகிறேன்.. யாரும் படிப்பதில்லை.. பிரதமர் ஆதங்கம்

webteam

தினமும் காலையில் ‘நமோ’ ஆப் மூலம் தான் அனுப்பும் செய்திகளை எம்.பிக்கள் யாரும் படிப்பதில்லை என்று பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக எம்.பி.க்களை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள ‘நமோ’ என்ற செயலியை பயன்படுத்துகிறார். இந்த செயலி பிரதமரின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிரதமர் அனுப்பும் குறுஞ்செய்திகளையும், இமெயில்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, “நான் தினமும் காலையில் நமோ ஆப் மூலம் நமஸ்தே சொல்கிறேன். உங்களில் நான்கு அல்லது ஐந்து பேர் தவிர அதை யாரும் கண்டுகொள்வதில்லை” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 333 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 276 பேர் மக்களவை உறுப்பினர்கள், 57 ராஜ்யசபா உறுப்பினர்கள். காலை நேர வாழ்த்து செய்தியுடன் பல முக்கியமான தகவல்களை எம்.பிக்களுக்கு அனுப்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.