யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் file image
இந்தியா

“இப்போது கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்..” - உ.பி சட்டப்பேரவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு

Angeshwar G

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.22ஆம் தேதி, பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இக்கோயிலைப் பார்வையிடவும், பால ராமரை வழிபடவும் தற்போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அதேபோல், ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநில சட்டப்பேரவையில் பேசுகையில், “அயோத்தி தீப உற்சவ நிகழ்வை நடத்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் கிடைத்த பாக்கியம். இதற்கு முந்தைய அரசாங்கங்களால் அயோத்தி நகரம் தடை மற்றும் ஊரடங்கு சட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது. பல நூற்றாண்டுகளாக அயோத்தி தீய நோக்கங்களால் சபிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்ட அவமதிப்பை எதிர்கொண்டது.

அநீதியைப் பற்றி பேசும்போது 5000 ஆண்டுகள் பழமையான விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த நேரத்தில் பாண்டவர்களுக்குக்கூட அநீதி இழைக்கப்பட்டது. அதுதான் அயோத்தி, காசி மற்றும் மதுராவில் நடந்தது.

யோகி ஆதித்யநாத்

அந்த நேரத்தில் கிருஷ்ணன் கௌரவர்களிடம் சென்று ‘ஐந்து கிராமங்களை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள். உங்களிடம் உள்ள நிலத்தையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் அங்கு மகிழ்ச்சியாக சாப்பிடுவோம்’ என்று கூறினார்.

ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக சென்ற கிருஷ்ணன் 5 கிராமங்களைக் கேட்டான். அது பாதியாகவே இருந்தாலும் நீதியைக் கேட்டான். ஆனால், நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த சமூகமும் அதன் நம்பிக்கையும் மூன்று விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அவை சாதாரண தலங்கள் அல்ல. இறைவனின் அவதார ஸ்தலங்கள்.

அயோத்தியில் மக்களது கொண்டாட்டங்களைப் பார்த்த பிறகு, நந்திக் கடவுள் (வாரணாசி) நான் ஏன் காத்திருக்க வேண்டுமென கேட்டு தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு வழிபாடு தொடங்கியுள்ளது. இப்போது கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்” என தெரிவித்துள்ளார்.