இந்தியா

ஹனுமனை தலித் என்பதா? உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்!

ஹனுமனை தலித் என்பதா? உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்!

webteam

ஹனுமனை தலித் என்று கூறிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பிராமண சபை நோட் டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின் றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில், பிரசாரப் பேரணியில் கலந்துகொண்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரபரப்பாக பேசினார்.

அவர் பேசும்போது, ‘ஹனுமன் ஒரு காட்டுவாசி. பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித். ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய் வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர் ஹனுமன். அவரைப்போல வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். ராம பக்தர்கள் பாஜகவுக்கு  வாக்களிக்க வேண்டும். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள்’ என்றார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா, யோகி ஆதித்யா நாத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், ‘உ.பி. முதலமைச்சர், கடவுள் ஹனுமனை அவமானப்படுத்தி பேசியிருப்பது வருந்தத்தக்கது. அவரது பேச்சு, மத உணர்வுகளையும் ஹனுமனின் பக்தர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அவர் இந்துமதத்தை அவமானப்படுத்தியுள்ளார். ஹனுமன், சக்தி வாய்ந்த கடவுள். அவரை தலித் என்று சொல்ல முடியாது. இப்படி பேசியதற்காக யோகி ஆதித்யநாத் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறும்போது, ‘பாஜக தனிநபரையும் சமூகத்தையும் பிரித்துவந்தது. இப்போது முதன் முறையாக சாதியி ன் அடிப்படையில் கடவுளையும் பிரித்துள்ளது’ என்றார்.