இந்தியா

அயோத்தியில் விரைவில் ’கிங் தசரத்’ மருத்துவக் கல்லூரி - யோகி ஆதித்யநாத்

webteam

அயோத்தியில் ’கிங் தசரத்’ பெயரில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்
தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் கொரியா நாட்டு மன்னரை திருமணம் செய்துகொண்ட அயோத்தி இளவரசிக்கு நினைவகம்
அமைக்கப்பட்டுள்ளது. இதை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி
மாவட்டம் என பெயர் சூட்டப்படும் எனவும்  அயோத்தியில் ’கிங் தசரத்’ பெயரில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் எனவும்
தெரிவித்தார். 

அயோத்திக்கு யாரும் அநீதி செய்ய முடியாது எனவும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் அமைக்கப்படும் எனவும்
தெரிவித்தார். 

சர்யூ ஆற்றின் மீது 151 மீட்டர் சிலை கொண்ட ராமரின் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பார் என்று பரவலாக
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத் அறிவிக்கவில்லை.