சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உ.பி.யில் மோடி தலைமையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகா பயற்சியை மேற்கொண்டனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட யோகா பயிற்சி நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.