இந்தியா

இன்று ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா

இன்று ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா

webteam

கர்நாடக ஆளுநரை சந்தித்து சிறுது நேரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெப்பு கோரினார். 6 நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 99 வாக்குகளே பெற்றதால் அரசு கவிழ்ந்தது. 

இதைத்தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி ஆகியோரை அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார். இவர்கள் நடப்பு பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 

இந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதல்ல என தமக்கு தெரிய வந்ததால் கட்சித் தாவல் தடைச் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். பிற அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை என 2 நாட்களில் அறிவிப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். 

இதனிடையே 105 இடங்களைக் கொண்டுள்ள பாரதிய ஜனதா ஆட்சியமைக்க உரிமை கோரும் எனத் தகவல் வெளியானது. அதன்படி இன்று 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து உரிமை கோர இருப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் இன்றே பதவி பிரமானம் செய்து வைக்குமாறு ஆளுநரை வலியுறுத்த உள்ளதாகவும் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.