இந்தியா

நியூமராலஜி: பெயரில் திருத்தம் செய்தார் எடியூரப்பா!

நியூமராலஜி: பெயரில் திருத்தம் செய்தார் எடியூரப்பா!

webteam

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா, தனது பெயரில் நியூமராலஜி அடிப்படையில் திருத்தம் செய்துள்ளார். 

தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது அதில் உள்ள சில எழுத்துக்களை மட்டும் அவர் மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, ’Yeddyurappa’ என்று குறிப்பிட்டு வந்த அவர், இப்போது ‘Yediyurappa’ என்று பெயரை திருத்தியுள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதியிருந்த கடிதத்தில் இந்த மாற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும் தற்போது புதிதாக மாற்றியுள்ள ஆங்கில எழுத்துக்களைத்தான் 2007ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எடியூரப்பா இதற்கு முன் 3 முறை முதல்வராக இருந்த போதும் ஒரு முறையும் ‌ஆட்சிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் நியூமராலஜிபடி பெயரை திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.