அகமதாபாத் விபத்து, ஜெயமோகன் x page
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து | எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது என்ன?

நிர்வாகக் குளறுபடிகள், குறைகள் குறித்த உதாசீனத்தால்தான் அகமதாபாத்தில் நிகழ்ந்தது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

PT WEB

நிர்வாகக் குளறுபடிகள், குறைகள் குறித்த உதாசீனத்தால்தான் அகமதாபாத்தில் நிகழ்ந்தது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். அகமதாபாத் விமான விபத்து குறித்து தன் வலைபக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், ஏர் இந்தியா நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்களை ஜெயமோகன் முன்வைத்துள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் இதுபோன்ற விபத்து நிகழும் என்ற பயம் தனது மனதில் இருந்துகொண்டே இருந்தது என்றும் அதனால் ஏர் இந்தியா விமானப் பயணத்தை எப்போதும் தவிர்த்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். உடைந்த இருக்கைகள், கழிப்பறை துர்நாற்றம், விமானம் தூய்மைப் படுத்தப்படாமல் இருப்பது என ஏர் இந்தியா விமானங்களில் எப்போதும் பிரச்னைகள் இருந்து வந்துள்ளதாக ஜெயமோகன் கூறியுள்ளார்.

குஜராத் விமான விபத்து

தொடர்ந்து புகார்கள் வந்த பிறகும் குறைகள் ஆண்டுக் கணக்கில் சரிசெய்யப்படாமல் இருப்பது நிர்வாகக் குளறுபடி மற்றும் குறைகள் குறித்த உதாசீனத்தின் அடையாளம் என்று அவர் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறைகளில் சிறு நிர்வாகச் சிக்கல்களைக்கூட கவனிக்க வேண்டும், தவறுகளைக் கண்டறிந்து, களைய வேண்டும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களை சாட்சியாக்கி நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது அதுதான் என்று எழுத்தாளர் ஜெயமோகன் வலியுறுத்தியுள்ளார்.